நடிகர் அஜித்குமார், இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுடன் உருவாக்கிய
ட்ரோனை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பயன்படும் ஏர்
ஆம்புலன்ஸ்களாக மாற்ற ஆய்வுகள் நடந்து வருகிறது. சர்வதேச அளவில் நடந்த
ட்ரோன் வடிவமைக்கும் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற டீம் தக்ஷா குழுவே
இந்த முயற்சியையும் செய்துள்ளது. இதன் மூலம் சென்னை - வேலூர் இடையே
ட்ரோன்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உட்பட்ட எம்ஐடி கல்லூரி மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச
ட்ரோன் வடிவமைக்கும் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த
போட்டியானது மருத்துவ கால அவசர நேரங்களில் ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு
இடத்திற்கு பயணிக்க நீண்ட நேரம் அதிக தூரம் குறிப்பிட்ட டாஸ்க்களை செய்யும்
திறன் கொண்ட ட்ரோன்களை வடிவமைக்க வேண்டும்.
இந்த போட்டியில் மாணவர்கள் அதற்கு சரியான ட்ரோன்களை செய்வதற்காக
ஆலோசனைகளை வழங்க எம்ஐடி நிர்வாகம் நடிகர் அஜித்குமாரை அழைத்தது.
அஜித்குமார் ஏற்கனவே ஆட்டோமொபைல் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். ஒரு
காலத்தில் கார் ரேஸ், பைக் ரேஸ் என்று கலக்கியவர். இன்று பறக்கும்
விமானங்களின் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார்.
இந்நிலையில் எம்ஐடி கல்லூரி நிர்வாகம் விடுத்த கோரிக்கையை ஏற்று
நடிகர் அஜித் மாணவர்களுக்கு ஆலோசகராக இணைந்தார். அந்த குழுவினற்கு தக்ஷா
என பெயர் சூட்டப்பட்டது. அஜித்தின் ஆலோசனையின் கீழ் மாணவர்கள் வெற்றிகரமாக
ஒரு ட்ரோனை உருவாக்கினர்.
அது கிட்டத்தட்ட அந்த போட்டிக்கு தேவையான அனைத்து தகுதிகளையும்
பெற்றது. முன்னதாக இந்திய அளவில் நடந்த ஒரு ட்ரோன் போட்டியில் கலந்து
கொண்டு சர்வதேச ட்ரோன் போட்டிக்காக ஒத்திகை பார்த்தனர். அதில் அவர்கள்
முதலிடம் பிடித்தனர்.
இதை தொடர்ந்து கடந்த மாதம் சர்வதேச அளவிலோன போட்டி ஆஸ்திரேலியாவில்
உள்ள குயின்ஸ்லேண்ட் என்ற பகுதியில் நடந்தது. இந்த போட்டியில் பல்வேறு
நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் சென்னையை சேர்ந்த டீம்
தக்ஷாவும் அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு அணியும்தான் இந்த போட்டியை
வெற்றிகரமாக முடித்தனர்.
இந்த போட்டி அறிவிக்கப்பட்டபோது, போட்டியை வெற்றிகரமாக முடித்தாலே
வெற்றி என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு அணிகள் இதை முடித்தனர்.
பொதுவாக தமிழகத்தில் நடக்கும் அதிக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வேலூர் மற்றும் சென்னையில்தான் நடக்கிறது. இந்த நேரங்களில் உடல் உறுப்புகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது.
இதனால் நடுவர் குழு யாரை வெற்றியாளராக தேர்வு செய்ய வேண்டும் என்று
குழம்பியது. இதன்பின் அந்த விமானம் பறக்கும் விதம், அதன் திறன்,
கட்டுபடுத்தும் விதம் ஆகியவற்றை வைத்து புள்ளிகள் வழங்கப்பட்டன. இதில்
சொற்ப புள்ளிகள் வித்தியாசத்தில் இந்திய மாணவர்கள் 2ம் இடத்தை பிடித்தனர்.
சர்வதேச போட்டியை நடத்திய குழு இரு அணிகளையும் பாராட்டியது. இந்த
சம்பவம் இந்த மாணவர்களுக்கு பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின் இந்த
பறக்கும் ட்ரோன் ஆராய்ச்சியை மேலும் தொடர முடிவு செய்தனர். அதில்
அவர்கள் நீண்ட தூரம், அதிக வேகத்தில் பறக்கும் ட்ரோன்களை தயாரித்தனர்.
தற்போது அந்த குழு வடிவமைத்த ட்ரோன் சுமார் 120 கி.மீ வேகத்திற்கு
பயணிக்கும் என்றும், மேலும் 15 கிலோ எடையை எளிதாக சுமந்து செல்லும்
என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த ட்ரோன்களை சென்னை-வேலூர் இடையே
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக உடல் உறுப்புகளை ஒரு இடத்தில் இருந்து
இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
பொதுவாக தமிழகத்தில் நடக்கும் அதிக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வேலூர் மற்றும் சென்னையில்தான் நடக்கிறது. இந்த நேரங்களில் உடல் உறுப்புகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது.
பல திறமையான டிரைவர்கள் இருந்தாலும் ரோடு வழியாக அதை எடுத்துச்செல்லும்போது பெரிய அளவில் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதை தவிர்த்து உடல் உறுப்புகளை ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு
இடத்திற்கு எந்தவித சிரமமும் இல்லாமல் இந்த ட்ரோன் மூலம் உறுப்புகளை
கொண்டு வருவதற்கான முயற்சி தற்போது நடந்து வருகிறது. அதாவது இந்த
ட்ரோன்கள் ஏர் ஆம்புலன்ஸ்களாக பயன்படுத்தப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஏர் ஆம்புலன்ஸ் நேரடியாக வேலூரில் இருந்து சென்னைக்கு பறந்து
வந்து விட முடியுமா? வேலூரில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு
ட்ரோனில் வந்து அங்கிருந்து மீண்டும் ஒரு ட்ரோனிற்கு மாற்றப்பட்டு
அங்கிருந்து சென்னைக்கு கொண்டு வரலாமா? என்று திட்டமிட்டு வருகின்றனர்.
தற்போது அவர்கள் திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் அரசின்
அனுமதியுடன் இந்த ட்ரோன்கள் ஏர் ஆம்புலன்ஸ்களாக பயன்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஏர் ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழகம்
முழுவதிலும் செல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த ட்ரோன்கள் சென்னையில் இருந்து வேலூருக்கு சென்று
மீண்டும் சென்னைக்கே திரும்பி வரும்படி வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பயணித்தின்போது ட்ரோனை முழுவதுமாக சென்னையில் இருந்தே கட்டுப்படுத்த
முடியும்.
தற்போது நடந்துவரும் இந்த ஆய்வு வெற்றிகரமாக முடிந்தால் சென்னையில்
இனி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பதற்றப்பட வேண்டியதே இல்லை.
உடல் உறுப்பு மாற்றிற்கு சென்னை மருத்துவமனைகள் பிரபலமாகி விடும்
வாய்ப்புகளும் உள்ளது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
-
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேல...
-
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள...
-
வேளச்சேரியில் 2 மாதக்குழந்தை காணாமல் போனதாக வந்த புகாரில் பெற்ற தாயே கொன்றது அம்பலமாகியுள்ளது. சென்னை வேளச்சேரி த்ரௌபதி அம்மன்...
-
தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையைச...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படு...
-
மதுராந்தகம் பிரபல பாத்திக்கடையில் இரண்டாவது நாளாக வருமான வரி துறையினர் சோதனை. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இயங்கி வரும்...
-
குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதியர் சரியான வயதில் முயல வேண்டும்; ஆணும் பெண்ணும் எந்த வயதில் கலவி கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள முயல்வத...
No comments:
Post a Comment