கிர்னார் என்பது ஹிந்துக்கள் மற்றும் ஜைனர்களுக்கு முக்கிய புனித
ஸ்தலமாக விளங்குகிறது. கிர்னார் என்பது ஒரு மலைத் தொடராகும். அதனால் இதனை
கிர்னார் மலை என்றும் அழைப்பதுண்டு. கிர்னாரை பற்றி வேதங்களில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இண்டஸ் பள்ளத்தாக்கு நாகரீகத்திலும்
கிர்னாரை பற்றி செய்திகள் உள்ளன. இது ஒரு புனித ஸ்தலமாக இருப்பதற்கு இதுவே
சான்றாகும்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
ஹிந்து மற்றும் ஜெயின் கோயில்கள் கிர்னார் மலை தொடர்ச்சியில் ஐந்து
உச்சிகள் உள்ளன. இங்கே பல ஹிந்து மற்றும் ஜெயின் கோவில்கள்
அமைந்திருக்கின்றன. இந்த கோவில்களை அடைய பக்தர்கள் பல ஆயிரம் படிகள் மேலே
ஏற வேண்டும். தீர்தன்காரா நேமிநாத் கோவில், மல்லிநாத் கோவில்,ரிஷபதேவ்
கோவில் மற்றும் பர்ஸ்வனத் கோவில் ஆகியவைகள் புகழ் பெற்ற ஜெயின்
கோவில்களாகும். பாவ்நாத் மகாதேவ் கோவில், தட்டாரேயா கோவில், அம்பா மாதா
கோவில், காளிகா கோவில், ராம்சந்திர கோவில், ஜடாஷங்கர் மகாதேவ் கோவில்
மற்றும் கௌமுகி கங்கா கோவில் ஆகியவைகள் இப்பகுதியில் அமையப்பெற்றுள்ள
முக்கிய ஹிந்து கோவில்கள்.
இது போக ஹனுமான் தாரா என்ற ஓடையும் கிர்னார் மலையின் மேற்கு திசையில்
உள்ளது. கிர்னார் மலையின் ஐந்து உச்சிகள் கிர்னார் மலையின் ஐந்து உச்சிகள்
இந்த்ச வரிசையில் தான் உள்ளன. முதல் உச்சியில் நேமிநாத் கோவிலை தொடர்ந்து
அம்பா மாதா கோவில் உள்ளது. இரண்டாவது உச்சியை குரு கோராக்நாத் உச்சி என்று
அழைப்பார்கள். மூன்றாவது உச்சிக்கு ஓகாத் உச்சி என்று பெயர். நான்காவது
உச்சியில் தட்டாரேயா கோயிலும், கடைசி உச்சியில் காளிகா கோயிலும்
அமையப்பெற்றுள்ளன. கிர் தேசிய பூங்கா கிர்னார் காட்டிற்கு அருகில் கிர்
தேசிய பூங்கா உள்ளது.
கிர்னார் மலைக்கு வருபவர்கள் கண்டிப்பாக கிர் காட்டையும் சுற்றி
பார்க்க வேண்டும். வானிலை கோடைக்காலத்தில் காலை வேளைகளில் வானிலை
ஈரப்பதத்துடன் இருக்கும். மதிய வேளைகளில் அவ்வளவு வெப்பம் இருக்காது.
வெப்பத்தை தவிர்க்க அதிகாலையிலேயே மலை மீது ஏற ஆரம்பித்து விட வேண்டும்.
செப்டம்பர் முதல் நவம்பர் வரை மற்றும் பிப்ரவரி மாதங்கள் தான் இங்கு
வருவதற்கு உகந்த பருவமாகும். டிசம்பர் மாத விடுமுறையில் அதிக பயணிகள் இங்கே
வருவதால் இம்மாதமே கிர்னாரில் உச்சபட்ச சீசன் காலம்
கிர்னார் மலை ஜுனகத் நகரத்துக்கு மிக அருகில் உள்ளது.
இங்கே இரயில்
மற்றும் அரசு பேருந்துகள் மூலமாக வந்தடையலாம். இங்கிருந்து 40 கி.மீ.
தூரத்தில் உள்ள கேஷோத் விமான நிலையம் அல்லது 100 கி.மீ. தூரத்தில் உள்ள
ராஜ்கோட் விமான நிலையம் மூலியமாகவும் இங்கே வரலாம். கிர்னார் என்பது ஒரு
புனித ஸ்தலம். இது வன விலங்குகளின் சரணாலயமாகவும் விளங்குகிறது. இப்படி பல
வகையான அனுபவத்தை ஒரே சுற்றுலாவில் பெற வேண்டுமானால் கிர்னாருக்கு
வாருங்கள்!
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
-
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேல...
-
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள...
-
வேளச்சேரியில் 2 மாதக்குழந்தை காணாமல் போனதாக வந்த புகாரில் பெற்ற தாயே கொன்றது அம்பலமாகியுள்ளது. சென்னை வேளச்சேரி த்ரௌபதி அம்மன்...
-
தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையைச...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படு...
-
மதுராந்தகம் பிரபல பாத்திக்கடையில் இரண்டாவது நாளாக வருமான வரி துறையினர் சோதனை. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இயங்கி வரும்...
-
குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதியர் சரியான வயதில் முயல வேண்டும்; ஆணும் பெண்ணும் எந்த வயதில் கலவி கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள முயல்வத..
No comments:
Post a Comment