லக்ஸரி கார் நிறுவனங்களில், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூவை
காட்டிலும், வால்வோ நிறுவனம் வெகுவாக வளர்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்த
விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
சுவீடன் நாட்டை சேர்ந்த லக்ஸரி கார் உற்பத்தி நிறுவனம் வால்வோ. வால்வோ
நிறுவனத்தின் கார்களில் இடம்பெற்றிருக்கும் பாதுகாப்பு அம்சங்கள்,
வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இதனால் இந்தியாவில் வால்வோ
கார்களின் விற்பனை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
2017ம் ஆண்டின் ஜனவரி-செப்டம்பர் வரையிலான 9 மாத கால கட்டத்தில்
வால்வோ நிறுவனம் இந்தியாவில், 1,413 கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த
எண்ணிக்கையானது, 2018ம் ஆண்டு ஜனவரி-செப்டம்பர் கால கட்டத்தில், 1,896ஆக
அதிகரித்துள்ளது.
இதன்மூலம் 2017ம் ஆண்டு ஜனவரி-செப்டம்பர் கால கட்டத்துடன்
ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டு ஜனவரி-செப்டம்பர் கால கட்டத்தில், இந்தியாவில்
வால்வோ கார்களின் விற்பனை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
முன்னதாக 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017ம் ஆண்டில் வால்வோ
நிறுவனம் 28 சதவீத வளர்ச்சியை கண்டிருந்தது. அந்த வளர்ச்சி விகிதம் 2018ம்
ஆண்டில் 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. வால்வோ நிறுவனம் இந்தியாவில்
படிப்படியாக வளர்ந்து வருவதை இந்த புள்ளி விபரங்கள் பறைசாற்றுகின்றன.
அதே நேரத்தில் ஜெர்மனியை சேர்ந்த மற்றொரு முன்னணி லக்ஸரி கார்
உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், விற்பனையில் சற்றே சரிவை
சந்தித்திருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டின் ஜனவரி-செப்டம்பர் வரையிலான கால
கட்டத்தில் இந்தியாவில் 11,869 கார்களை மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனை
செய்திருந்தது.
ஆனால் இந்த எண்ணிக்கையானது 2018ம் ஆண்டின் ஜனவரி-செப்டம்பர் கால
கட்டத்தில் 11,789ஆக சற்றே சரிவை சந்தித்து இருக்கிறது. அதே நேரத்தில்
ஜெர்மனி நாட்டை சேர்ந்த மற்றொரு லக்ஸரி கார் உற்பத்தி நிறுவனமான
பிஎம்டபிள்யூ வளர்ச்சியை சந்தித்துள்ளது.
2018ம் ஆண்டின் ஜனவரி-செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில்
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் 7,915 கார்களை விற்பனை செய்துள்ளது. இது
2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11 சதவீத வளர்ச்சி என்பது
குறிப்பிடத்தக்கது.
லக்ஸரி கார் உற்பத்தி நிறுவனங்களில் வால்வோ 34 சதவீத வளர்ச்சியையும்,
பிஎம்டபிள்யூ 11 சதவீத வளர்ச்சியையும் கண்டுள்ள நிலையில், மெர்சிடிஸ்
பென்ஸ் மட்டும் சிறிய அளவிலான சரிவை சந்தித்துள்ளது.
ஆனால் ஜெர்மனி நாட்டை சேர்ந்த மற்றொரு முன்னணி லக்ஸரி கார் உற்பத்தி
நிறுவனங்களில் ஒன்றான ஆடி, 2018ம் ஆண்டின் ஜனவரி-செப்டம்பர் மாதம் வரையிலான
தனது சேல்ஸ் ரிப்போர்ட்டை இன்னும் வெளியிடவில்லை.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
-
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேல...
-
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள...
-
வேளச்சேரியில் 2 மாதக்குழந்தை காணாமல் போனதாக வந்த புகாரில் பெற்ற தாயே கொன்றது அம்பலமாகியுள்ளது. சென்னை வேளச்சேரி த்ரௌபதி அம்மன்...
-
தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையைச...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படு...
-
மதுராந்தகம் பிரபல பாத்திக்கடையில் இரண்டாவது நாளாக வருமான வரி துறையினர் சோதனை. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இயங்கி வரும்...
-
குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதியர் சரியான வயதில் முயல வேண்டும்; ஆணும் பெண்ணும் எந்த வயதில் கலவி கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள முயல்வத..
No comments:
Post a Comment