உகாண்டா: எனக்கு கல்யாணம் பண்ணிக்கிறதே பிடிக்கலைன்னு சொல்லியாச்சு... சும்மா
நொய்... நொய்...ன்னு தொந்தரவு பண்ணா என்ன செய்யது? அதான் இப்படி பண்ண
வேண்டியதா போச்சு" என்கிறார் லுலு!! யார் இந்த லுலு?? என்னதான் பிரச்சனை
இவருக்கு??
உகாண்டாவை சேர்ந்தவர்தான் இந்த லுலு ஜெமிமா. ஆக்ஸ்போர்டு பல்லைக் கழக
மாணவி. இவருக்கு 32 வயசு ஆகிவிட்டது. ஆனால் கல்யாணம் ஆகவில்லை. வீட்டில்
எவ்வளவோ சொல்லி பார்த்தும், தனக்கு கல்யாணம் பிடிக்கவில்லை என்று சொல்லிக்
கொண்டே இருந்தார். அது மட்டும் இல்லை, வளர்ந்து வரும் குடியரசு நாடுகளில்
கல்யாணம் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கியமான ஒன்று. அதாவது தலையாய
கடமை என்று கூட சொல்லலாம்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
இப்பவே 32 வயசு
அதனால் லுலுவின் பெற்றோர் கல்யாணத்தை பண்ணி பார்க்க ரொம்பவே
ஆசைப்பட்டார்கள். "எனக்கு இப்பவே 32 வயசு ஆயிடுச்சு. இப்ப போய் எனக்கு
மாப்பிள்ளை கிடைக்குமா? இதனால நிறைய சிக்கல் வரும். அது மட்டும் இல்லை,
பணப்பிரச்சனை வேற எனக்கு நிறைய இருக்கு... அதனாலதான் இந்த முடிவை
எடுத்துட்டேன்" என்றார்.
பெற்றோர் ஷாக்
அப்படி என்ன முடிவு லுலு எடுத்தார் தெரியுமா? தன்னுடைய 32 பிறந்த நாள்
அன்னைக்கு பக்கா மணப்பெண் போலவே டிரஸ் அணிந்து கொண்டு தனக்குத்தானே
கல்யாணம் செய்துக்கிட்டார். இந்த கல்யாணத்துக்கு பெற்றோர் யாருமே வரவில்லை.
தான் தன்னையே சுயமாகவே கல்யாணம் செய்துக்கிட்ட விஷயத்தை பெற்றோருக்கு போன்
பண்ணி சொன்னால் லுலு. இதனை கேட்டு பெற்றோர் உட்பட எல்லோருமே ஷாக் ஆகி
விட்டனர்.
வைரல் புகைப்படம்
லுலு கல்யாணமும், மணப்பெண் அலங்கார போட்டோவும் இணையத்தில் வைரலாகி
வருகிறது. லுலுவின் இந்த காரியத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
லுலு ஒரு துணிச்சலான பெண்... வெளிப்படையான பெண்... பொதுப்படையான எண்ணங்களை
உடைத்தெறிய முன்வந்துள்ள பெண்.. என்றெல்லாம் ஆதரவு வார்த்தைகள் இணையத்தில்
பரவி வருகிறது.
நானே கணவன்-மனைவி
"என்னம்மா லுலு..உன் கல்யாணத்தை பத்தி என்ன நினைக்கிறே?" என்று கேட்டால்,
"என்னை நன்றாக பார்த்து கொள்ளும், கவனித்து கொள்ளும், அக்கறையான ஒருவரைதான்
நான் கல்யாணம் செய்துருக்கிறேன். அதனால எனக்கு கவலை இல்லை. இன்னையில
இருந்து நான் கல்யாணம் ஆனவள். நான்தான் மாப்பிள்ளை, நான்தான் பொண்ணு!! நானே
மனைவி... நானே கணவன்!!" என்கிறார் லுலு. சரி.. சரி... வாழ்த்துக்கள்
மணம(க்)களே!!
எல்லாம் சரி.. "மத்ததெல்லாம்" எப்படி சாத்தியமாகும்.. லுலுவே இதற்கும்
ஏதாவது பதில் வைத்திருப்பார்!
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
-
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேல...
-
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள...
-
வேளச்சேரியில் 2 மாதக்குழந்தை காணாமல் போனதாக வந்த புகாரில் பெற்ற தாயே கொன்றது அம்பலமாகியுள்ளது. சென்னை வேளச்சேரி த்ரௌபதி அம்மன்...
-
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் குறைந்த காற்றழ...
-
ஒரு காலத்தில் ... ரொம்ப பின்னாடி போகாதீங்க ஒரு 15 வருஷம் முன்னாடி எல்லாம் வீட்டுல கேபிள் இருக்கானு கேக்கமாட்டாங்க . உங்க ...
-
மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படு...
-
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நேற்று வெளியாகிய நிலையில், அந்த புகைப்படத்திற்கு ரசிகர...
-
குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதியர் சரியான வயதில் முயல வேண்டும்; ஆணும் பெண்ணும் எந்த வயதில் கலவி கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள முயல்வத...
No comments:
Post a Comment