ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது லுக்
போஸ்டர் நேற்று வெளியாகிய நிலையில், அந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடையே
வரவேற்பும், விமர்சனங்களும் எழுந்துள்ளன.
ரஜினியின் பின்புறம் சூரியன் இருப்பது போல் அமைந்துள்ளதால் அரசியல் ரீதியாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
‘காலா’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ‘பேட்ட’.
கார்த்திக்
சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், திரிஷா
நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் ரஜினியுடன் நடிக்கும் முதல் படம் இது.
இவர்களுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ்
உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
நடிகர் சசிகுமார்
இந்தப் படத்தில் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தமாகி படப்பிடிப்பில்
பங்கேற்றார். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சிகளில் சசிகுமார் பங்களிப்பு
இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘பேட்ட’
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பு பெற்ற
நிலையில், செகண்ட் லுக் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது. இதில்
முறுக்கு மீசையுடன் ரஜினி, வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக கிராமத்து
தோற்றத்தில் இருக்கிறார்.
ரஜினியின் பிளாஷ்பேக்
பகுதிகள் மதுரையில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த தோற்றம் தான்
இது என்கிறார்கள். இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினி
சமீபகாலமாக இளமையாக நடிப்பதை தவிர்த்து தனது வயதுக்கேற்ற தோற்றங்களில்
நடித்து வந்தார். 2014-ம் ஆண்டு வெளியான லிங்கா படத்தில் இளமையான
தோற்றத்தில் நடித்தார். அந்த படம் சரியாக போகவில்லை. அதன் பின்னர் நடித்த
கபாலி, காலா படங்களில் வயதான தோற்றத்தில் நடித்தார்.
‘பேட்ட’ படத்தின் இந்த போஸ்டரில் இளமையாகவும், ஸ்டைலிஷாகவும்
காணப்படுகிறார். ரஜினியின் 1980-90 காலகட்ட தோற்றத்தை இது
நினைவுபடுத்துவதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த
புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
ரஜினியின்
இந்த தோற்றம் ஒரு பக்கம் வரவேற்பை பெற்றாலும், இன்னொரு பக்கம்
விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. வேட்டி சட்டை தோற்றம் தேவர் மகன்,
வீரம் உள்ளிட்ட சில படங்களை நினைவுபடுத்துவதாகவும், மீசை சிங்கம் படத்தில்
வரும் சூர்யாவை நினைவுபடுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம், மோகல்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலைகள் கடத்தல் பிரிவு IG திரு...
-
தே னி அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய 11 வயது மகள் ராகவி. கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டா...
-
தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசும்ப...
-
ஒருவர் 20 முதல் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால் அவருக்கு பத்தாண்டுகளில் மூளை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என ஆய்வு செய்...
-
நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் ...
-
வரும் 8 ம் தேதி வரை தமிழகம் , புதுச்சேரி , கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய ...
-
ஒன்றாக மது அருந்திய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து விளையாட்டாக இளைஞரை கிணற்றில் தள்ள, நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். மறுநாள் அவரது செ...
-
அட, பாவி மனுஷா… உன்னை நம்பிதானே என் சாதி சனத்தையெல்லாம் உதறி விட்டு உன்கூட வந்தேன்..! எனக்கு துரோகம் பண்ணிட்டியே? அவளும் என்னை மாத...
-
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கூலி தொழிலாளியின் மகளுக்கு வியர்வையாக ரத்தும் வெளியேறுவதால் பெற்றோர்கள் செய்வதறியாமல் திகைத்த...
-
நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் .
No comments:
Post a Comment