வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நேதாஜி உயிரோடு இருக்கிறாரா???
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 16, 2018

நேதாஜி உயிரோடு இருக்கிறாரா???



சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் மரணம் அடைந்தாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது குறித்து விளக்கம் அளிக்கும் படி, தேசிய ஆவண காப்பகத்திற்கு, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



நாட்டின் சுதந்திர போராட்ட காலத்தில், இந்திய தேசிய ராணுவம் என்ற அமைப்பை உருவாக்கி, அதில் இளைஞர்கள் பலருக்கும் ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட ராணுவ பயிற்சி அளித்தவர், சுபாஷ் சந்திரபோஸ். ஆங்கிலேயருக்கு எதிரான இவரது வீரம், தலைமை பண்பு ஆகியவற்றால், 'நேதாஜி' என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். (தொடர்ச்சி கீழே...)


இதையும் படிக்கலாமே !!!

நேதாஜி வெளிநாட்டிற்கு சென்றபோது, மர்மமான முறையில், விமான விபத்தில் இறந்ததாகக் கூறப்படுகிறது.இவரது மரணம் குறித்த ஆவணங்கள், சமீபத்தில் வெளியிடப்பட்டன. எனினும், இதில் தனக்கு திருப்தி அளிக்கும் வகையிலான தகவல்கள் இடம் பெறவில்லை எனக் கூறி, சமூக ஆர்வலர், அவ்தேஷ் குமார் சதுர்வேதி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கேள்வி எழுப்பியுள்ளார்.



'நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்' என, அவர், தன் மனுவில் கேட்டுள்ளார். நேதாஜி மரணம் குறித்த ரகசியங்கள் வெளியிடப்பட்டு, அது குறித்த ஆவணங்கள், மத்திய ஆவண காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, சதுர்வேதி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு, உரிய ஆவணங்களுடன் பதில் அளிக்கும்படி, மத்திய ஆவண காப்பகத்திற்கு, தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment