வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இந்து மதத்துக்கு எதிராக மோகன் சி.லாசரஸ் எங்கே, எப்போது பேசினார்: மதுரை ஐகோர்ட் கேள்வி
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 10, 2018

இந்து மதத்துக்கு எதிராக மோகன் சி.லாசரஸ் எங்கே, எப்போது பேசினார்: மதுரை ஐகோர்ட் கேள்வி



இந்து மதத்துக்கு எதிராக மோகன் சி.லாசரஸ் எங்கே, எப்போது பேசினார் என்பது போன்ற விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ், "ஹிந்து கடவுள்களை சாத்தான்கள், ஹிந்து ஆலயங்களை சாத்தான்களின் அரண்கள் என்று பேசியதாக அவர் மீதுபுகார் எழுந்தது.
சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் : காஞ்சி. கலெக்டர் தகவல் - Last Date - 01/11/2018 # தகாத உறவுக்கு தடையாக இருந்த தந்தை… ரவுடிகளை வைத்து போட்டு தள்ளிய மகள் # நாம் அனைவருக்கும் புற்றுநோய் உள்ளதா..? இதை கவனமாக படியுங்கள்..!


தனிப்படை அமைப்பு இந்துமத கோவில்களையும் இழிவாகவும் தரக்குறைவாகவும், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் பேசி வரும் மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்மீது பல்வேறு இந்து அமைப்பினர் சார்பாக புகார்கள் வரத் தொடங்கின.தொடர்ச்சி கீழே...)  

இதையும் படிக்கலாமே !!!
இதுசம்பந்தமாக போலீசாரும் வழக்கு பதிவு செய்து மோகன் சி லாசரஸை பிடிக்க தனிப்படை அமைத்தனர். மோகன் சி லாசரஸ் விளக்கம் இதற்கு மோகன் சி லாசரஸ், "எனது உடன் பிறந்த சகோதரர்களும் இந்து மத்தில்தான் உள்ளனர் என்றும், இந்து மதத்துக்கு எதிராக நான் எதுவுமே பேசவில்லை என்றும் வாட்ஸ்அப் வீடியோ மூலம் விளக்கம் அளித்திருந்தார். அத்துடன் ‘‘இந்த விவகாரம் தொடர்பாக கோட்டாறு போலீசார் என் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


ஐகோர்ட் கிளையில் மனு நான், தவறான நோக்கத்தில் யாரையும் விமர்சித்து பேசவில்லை. எனவே, அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்,'' என்று ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. விவரம் இல்லை அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘குறிப்பிடும் இந்த சம்பவம் கடந்த 2014, மார்ச் 18-ம் தேதி சென்னையில் நடந்த ஒன்று ஆகும். ஆனால் கடந்த செப். 23ல் மதுரையில் பேசியதாக சேலம் செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கை பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் மோகன் சி லாசரஸ் எங்கு பேசினார், எப்போது இப்படி பேசினார், எந்த ஊரில் பேசினார் என்ற விபரம் போலீசார் தெரிவிக்கவில்லை.


எங்கே பேசினார்? கடந்த செப். 23ல் மனுதாரர் இந்தியாவிலேயே இல்லை, அவர் வெளிநாட்டில் இருந்தார்'' என்று கூறினார். இதனை கேட்ட நீதிபதி, மோகன் சி லாசரஸ் எந்த ஊரில், எங்கு, எப்போது இந்த சர்ச்சைக்குரிய பேச்சை பேசினார் என்ற விவரங்களை அரசு தரப்பில் தெரிவிக்க வேண்டும் என்றார். அதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.



அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment