வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: முதல்வர் பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 12, 2018

முதல்வர் பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு



முதல்வர் பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்..

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முதல்வர் பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறையின், ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த இந்த வழக்கில் தற்போது விசாரணை நடந்து வருகிறது.


முதலில் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார். லஞ்ச ஒழிப்புத் துறைதான் இந்த வழக்கை விசாரித்து வந்தது. இதில் கிட்டத்தட்ட 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்த பணிகளில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை என்பது முதல்வருக்கு கீழே செயல்படக்கூடிய ஒரு அமைப்பு. அதனால் இதில் பெரிய அளவில் எந்த விசாரணையும் செய்யப்படாமல், வழக்கில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இதனால் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது புதிய திருப்பமாக சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீதான வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. [திடீர் வாக்கு வங்கியாக மாறும் வட மாநிலத் தொழிலாளர்கள்.. என்ன காரணம்.. பரப பின்னணி! ] தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் முறையாக விசாரிக்கவில்லை. 
 
இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மிகவும் மெத்தனமாக செயல்பட்டுள்ளது. இதனால் விசாரணையை சிபிஐ மேற்கொள்ளட்டும். 3 மாதத்தில் சிபிஐ முதல் கட்ட விசாரணையை முடிக்க வேண்டும். இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment