வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ப்ரீகேஜி டூ யுகேஜி..! அரசுப் பள்ளியில் சாத்தியமாகுமா ?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 12, 2018

ப்ரீகேஜி டூ யுகேஜி..! அரசுப் பள்ளியில் சாத்தியமாகுமா ?



தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் ப்ரீகேஜி, எல்.கேஜி, யு.கேஜி உள்ளிட்ட பள்ளி முன்பருவக் கல்விக்கான பாடத்திட்டம் மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக கல்வியாளர்கள், பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

தனியார் மற்றும் சிபிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகளில் மட்டுமே செயல்பட்டு வரும் பள்ளி முன்பருவக் கல்வித் திட்டம் நாடு முழுவதும் பொதுவான திட்டமாக இருக்க வேண்டும் என மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
 அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு இத்திட்டத்தின் படி கல்விக்கான பாடத் திட்டத்தை தயாரிக்க ஆணையிட்டனர். 
 
இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் ப்ரீகேஜி, எல்.கேஜி, யு.கேஜி உள்ளிட்ட பள்ளி முன்பருவக் கல்விக்கான பாடத்திட்டத்தை தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி வழியில் எஸ்.சி.இ.ஆ.ர்டி உருவாக்கி www.tnscert.org என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


மேலும், இத்திட்டம் குறித்து பொதுவான கருத்து கேட்கும் வகையில், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்களது கருத்துக்கள் மற்றும் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளைத் தெரிவிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்புவோர் சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறைத் தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்குக் கடிதம் மூலமாகவோ அல்லது awpb2018@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலோ தங்களது கருத்துக்களை வரும் அக்டோபர் 30-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment