அனைவருக்குமே வழிபடுவதற்கான உரிமை உள்ளதே தவிர இழிவுபடுத்துவதற்காக
உரிமை கிடையாது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
இளம் சிந்தனையாளர்கள் மாநாடு மும்பையில் இன்று நடைபெற்றது இதில் பங்கேற்று
ஸ்மிருதி இரானி (42) பேசுகையில் சபரிமலை விவகாரம் குறித்து தனது கருத்தை
தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து
தெரிவிக்கும் அளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாது. (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
இழிவுபடுத்தும் உரிமை
இல்லை
ஆனால் வழிபடும் உரிமை உள்ளது என்பதில் எனக்கு எவ்வாறு நம்பிக்கை உள்ளதோ அதே
போல இழிவுபடுத்துவதற்காக உரிமை கிடையாது என்பதிலும் நம்பிக்கை உள்ளது.
இதற்கு பெரிய சட்ட நுணுக்கங்கள் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
சாமானியமாக நீங்களே யோசியுங்களேன்.
சானிட்டரி நாப்கின்
மாதவிடாய் காரணமாக ரத்தத்தோடு இருக்கக்கூடிய ஒரு சானிட்டரி நாப்கினை
உங்களது நண்பர்களின் வீட்டுக்கு தூக்கி கொண்டு செல்வீர்களா? இல்லை தானே!
அப்படி இருக்கும்போது கடவுளின் வீட்டுக்கு மட்டும் ஏன் அவ்வாறு சென்றே
ஆகவேண்டும்?
நானும் பின்பற்றுகிறேன்
மும்பை அந்தேரியில் உள்ள கோயில் ஒன்றிற்கு நான் சென்றபோது மாதவிலக்கு
காரணமாக நான் கோயிலுக்கு வெளியே நின்றுகொண்டு இருந்தேன். எனது மகனை மட்டும்
பூசாரியிடம் கொடுத்து அனுப்பி பூஜை விஷயங்களை நிறைவேற்றி வருமாறு
தெரிவித்தேன். இதுதான் நான் கோயிலுக்கும், மரபுகளுக்கும் வழங்கக்கூடிய
மரியாதை. இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் உத்தரவு
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட
உரிமையுள்ளது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதை
எதிர்த்து, பம்பை முதல் சன்னிதானம் வரை போராட்டங்கள் நடைபெற்றதால்,
மாதவிடாய் சுழற்சி கொண்ட எந்த இளம் பெண்ணும் சபரிமலைக்கு செல்ல முடியவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
ஆவடி, பாரதியார் தெருவை சேர்ந்தவர் தேவானந்தன். இவருக்கு ஆனந்தி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் மாற்றும...
-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த ந...
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
உத்தராகண்ட் மாநிலம் டோராடன் பகுதியில் வைஷ்ணவி என்கின்ற மாணவி ஒரே பள்ளியில் பயின்று வந்துள்ளார். அப்பா அம்மா இல்லாத வைஷ்ணவி உறவினர்கள் உ...
-
தற்போதைய வாழ்கை முறையில் நாம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மறந்து வருகின்றோம். இதனால் நமக்கு எளிமையான முறையில் கிடைக்கும் பல இயற...
-
பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் #MeToo என்ற ஹேஷ்டேக் வைரலானது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே ...
-
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள சௌரா பஜாக் என்னும் இடத்தில் தசரா பண்டிகை இன்று மாலை கொண்டாடப்பட்டது. அப்போது ராவணனை வாதம் செ...
-
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 9 வயது மகள் காணாமல் போனதாக போனியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ...
-
பார்க்காமலேயே காதல் என்பது சினிமாவை தவிர நிஜவாழ்க்கையில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். மேற்கு ...
-
ஆந்திராவைச் சேர்ந்த 40 வயது கொண்ட மாதவி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயரை பெற்றுள்ளார். சபரிமலை அய்யப்பன்...
No comments:
Post a Comment