பிரபல சமூகவியலாளர் பேராசிரியர் ஜிடிஅகர்வால் தொடர் உண்ணாவிரதம்
காரணமாக ஹரித்வாரில் மரணம் அடைந்தார்.
இவர் கங்கை நதியை சுத்தம் செய்ய வேண்டும் என்று இத்தனை வருடமாக போராடி
வந்தார். இதற்காக அவர் தொடர் உண்ணாவிரதம் இருந்தார்.
உண்ணாவிரதம் காரணமாக உடல்நலம் குன்றிய அவர் இன்று அதிகாலை 1.30 மணிக்கு
ஹரித்வார் கங்கை கரையில் மரணம் அடைந்தார். இவர் உடல் எய்ம்ஸ்
மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
யார் இவர்
சமூகவியலாளர் பேராசிரியர் ஜிடி.அகர்வால் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப்
டெக்னலாஜி கான்பூரில் பேராசிரியராக இருந்தவர். அதேபோல் மத்திய மாசுக்
கட்டுப்பாட்டு வாரியத்தில் இவர் பணியாற்றி இருக்கிறார். ஐஐடியிலும்,
கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் இவர் படித்துள்ளார். குரல் கொடுத்தவர்
இவர் நீர் மாசுபாடு தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். உத்தர
பிரதேசத்தில் பிறந்தவர் என்பதால் கங்கை நதி மாசுபடுவதற்கு எதிராக போராடி
வந்தார். அங்கு எவ்வளவு மாசு கலக்கிறது என்று துல்லியமாக கணக்கிட்டு,
நதியின் எதிர்காலத்தை கணித்து பல ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டவர்
ஜிடி.அகர்வால். ஆனால் அரசு இவரின் அறிக்கைகளை கண்டுகொள்ளவில்லை.
உண்ணாவிரதம் இருந்தார்
இதன் காரணமாக வெகுண்டெழுந்த இவர் கடந்த ஜூன் 22ம் தேதி உண்ணாவிரதம் செய்ய
தொடங்கினார். கங்கையை சுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து
உண்ணாவிரதம் இருந்தார். கங்கை நதியில் உள்ள நகரங்களுக்கு எல்லாம் சென்று
உண்ணாவிரதம் இருந்தார்.
111 நாட்கள்
தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த காரணத்தால் இவரது உடல்நிலை குன்றியது. இந்த
நிலையில் இவர் இன்று அதிகாலை 1.30 மணிக்கு மரணம் அடைந்தார். 111 நாட்கள்
இவர் உண்ணாவிரதம் இருந்துள்ளார். இதன் காரணமாக ஹரித்வாரிலும், அவர் பிறந்த
ஊரிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கங்கை நதியை சுத்தம்
செய்வதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, இவரது மறைவிற்கு
இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
-
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேல...
-
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள...
-
வேளச்சேரியில் 2 மாதக்குழந்தை காணாமல் போனதாக வந்த புகாரில் பெற்ற தாயே கொன்றது அம்பலமாகியுள்ளது. சென்னை வேளச்சேரி த்ரௌபதி அம்மன்...
-
தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையைச...
-
மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படு...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
மதுராந்தகம் பிரபல பாத்திக்கடையில் இரண்டாவது நாளாக வருமான வரி துறையினர் சோதனை. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இயங்கி வரும்...
-
குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதியர் சரியான வயதில் முயல வேண்டும்; ஆணும் பெண்ணும் எந்த வயதில் கலவி கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள முயல்வத..
No comments:
Post a Comment