ஒரு காலத்தில்... ரொம்ப பின்னாடி போகாதீங்க ஒரு 15 வருஷம் முன்னாடி எல்லாம் வீட்டுல கேபிள் இருக்கானு கேக்கமாட்டாங்க. உங்க வீட்ல சன் டிவி இருக்கான்னு தான் கேப்பாங்க. அந்த அளவுக்கு சன் டீவியின் பிரபல்யம்.
அதிகரிக்கும் போட்டி சன் டிவியின் சீரியல்களுக்கு சொக்கு பொடி போட்டது போல பார்த்த காலம் எல்லாம் போய் இப்போது ஸ்டார் குழுமம், ஜீ குழுமம், கலர்ஸ் குழுமம் போன்ற சேனல்களின் நிகழ்ச்சிகளையும் ஆவலோடு பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். பிக் பாஸ் ஒரு சிறந்த உதாரணம்.
வந்துட்டேன்னு சொல்லு இப்போது தன்னுடைய பழைய சந்தையை பிடிக்க, தற்போது இருக்கும் சந்தையை மேலும் விரிவுபடுத்த சன் டிவி , தன்னுடைய சன் லைஃப் என்கிற சேனலின் பொலிவை முற்றிலுமாக மாற்ற இருக்கிறது. தற்போது சன் டிவி யின் சந்தை GEC (General Entertainment Category) துறையில் 50 சதவிகிதத்துக்கு கொஞ்சம் கீழே வைத்திருக்கிறார்கள்.
இதை ஒரு 60 சதவிகிதமாக அதிகரிக்கத் தான் இந்த அதிரடி முடிவு என்று சன் டிவி குழுமத்தின் முதன்மை நிதி அதிகாரி நாராயணன் தெரிவித்திருக்கிறார். சன் லைஃப் சன் லைஃப் தற்போது சன் லைஃப் தொடர்ந்து பழைய படங்கள் மற்றும் பழைய பாடல்களை மட்டுமே ஒளிபரப்பி வருகிறது. இந்த சேனலின் ப்ரைம் நேரங்களில் மட்டும் புதிய நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறார்கள். ப்ரை நேரம் என்பது இரவு 8 மணி தொடங்கி பின் இரவு வரையான நேரத்தைத் தான் சன் குழுமம் ப்ரைம் நேரமாகப் பார்க்கிறது. குறிப்பாக 18 - 35 வயதுக்குட்பட்ட மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்களுக்கு பிடிக்கும் விதத்தில் நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
சொப்பன சுந்தரி அமெரிக்காவில் "America's Next Top Model" என்கிற பெயரில் நடத்தப்படும் பிரபலமான ஷோவைத் சொப்பன சுந்தரி என்கிற பெயரில், தமிழகத்துக்கு ஏற்ற மாதிரி மாற்றி நடத்த இருக்கிறார்கள். ஜிகுஜிகு என்று க்ளாமராக பெண்களை இறக்கி, இளைஞர் பட்டாளத்தை, தங்கள் நிகழ்ச்சிகளைப் பார்க்க வைக்க அவர்கள் போட்டிருக்கும் முதல் பிரம்மாஸ்திரம் இந்த சொப்பன சுந்தரி தானாம். இப்படி இன்னும் நிறைய லைவ் நிகழ்ச்சிகளை திட்டமிட்டு இருக்கிறார்களாம். நிர்வாக மாற்றம் நிர்வாக மாற்றம் சன் டிவியின் தமிழ் ஒளிபரப்புகளில் பெரும்பான்மையானவை private producer (PP) என்கிற முறையில் தான் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகிறது.
இந்த முறையில் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளுக்கு அவர்களிடம் இருக்கும் விளம்பரப் பணம் மூலமாகத் தான் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு அனைத்தையும் சரிக் கட்டுகிறார்கள். இனி கமிஷன் அடிப்படையில் நிகழ்ச்சிகளை தயரிக்க இருக்கிறார்கள். இந்த முறையில் சன் குழுமமே ஒரு குறிப்பிட்ட தொகைக்கு நிகழ்ச்சிகளை வாங்கிக் கொள்ளும், கன்டென்ட் உரிமைகளையும் சன் குழுமமே வைத்துக் கொள்ளும். இதனால் எதிர்காலத்தில் மீண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும் என்றால் குழுமம் யாரிடமும் உரிமை பெற வேண்டிய அவசியம் இருக்காது.
லேட்டாக மாறும் தமிழ் மலையாளம், கன்னடா, தெலுங்கு போன்ற சன் குழுமத்தின் மற்ற சேனல்கள் சில வருடங்களுக்கு முன்பே மாறத் தொடங்கிவிட்டன. ஆனால் தமிழ் தான் இன்னும் பெரிய அளவில் private producer (PP) முறையில் நிகழ்ச்சிகளை தயாரித்துக் கொண்டிருக்கிறது. இதை மாற்றுவது நிறுவனத்தின் லாபத்தையே நேரடியாக அதிகரிக்கும் என்று பங்குச் சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பு வெளியான பின் சன் டிவி பங்குகள் 610 ரூபாயில் இருந்து 628 ரூபாய்க்கு அதிகரித்து வர்த்தகமாயின.

Popular Posts
-
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம், மோகல்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலைகள் கடத்தல் பிரிவு IG திரு...
-
தே னி அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய 11 வயது மகள் ராகவி. கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டா...
-
தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசும்ப...
-
ஒருவர் 20 முதல் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால் அவருக்கு பத்தாண்டுகளில் மூளை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என ஆய்வு செய்...
-
நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் ...
-
வரும் 8 ம் தேதி வரை தமிழகம் , புதுச்சேரி , கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய ...
-
அட, பாவி மனுஷா… உன்னை நம்பிதானே என் சாதி சனத்தையெல்லாம் உதறி விட்டு உன்கூட வந்தேன்..! எனக்கு துரோகம் பண்ணிட்டியே? அவளும் என்னை மாத...
-
ஒன்றாக மது அருந்திய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து விளையாட்டாக இளைஞரை கிணற்றில் தள்ள, நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். மறுநாள் அவரது செ...
-
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கூலி தொழிலாளியின் மகளுக்கு வியர்வையாக ரத்தும் வெளியேறுவதால் பெற்றோர்கள் செய்வதறியாமல் திகைத்த...
-
நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் ..
No comments:
Post a Comment