வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: உஷார் - தமிழகத்திற்கு 7 ம் தேதி ரெட் அலர்ட் - Red Alert for Tamil Nadu
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 04, 2018

உஷார் - தமிழகத்திற்கு 7 ம் தேதி ரெட் அலர்ட் - Red Alert for Tamil Nadu




வரும் 8 ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இத்துடன் தமிழகத்தில் வரும் 7 ம் தேதி மிக தீவிரமான கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 7 ம் தேதி முதல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 8 ம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனக்கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில், வரும் 7 ம் தேதி மிக தீவிரமான கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தயார் நிலையில் இருக்க வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது. அன்று, 25 செ.மீ., அளவுக்கு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


பரவலாக மழை

இதனிடையே, சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் தொடர்ச்சியாக பெய்யும் மழை காரணமாக பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதனால், அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் 2வது நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அங்கு, அதிகபட்சமாக பூதலூரில் 102 மி.மீ., மழையும், தஞ்சையில் 20 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சென்னை, மதுரை, ராமநாதபுரம்,புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி,அரியலூர், திருவாரூர், சிவகங்கை, தூத்துக்குடி, நாகை, வேலூர், காஞ்சிபுரம், தேனி, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.


மழை அளவு
நாகபட்டினம் மாவட்டம் வேதாரண்யம்- 87. 40 மி.மீ.,
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி- 32 மி.மீ.,
சேலம் மாவட்டம் ஏற்காடு - 23 மி.மீ.,
வேலூர் மாவட்டம் ஆம்பூர் - 22 மி.மீ., திருப்பத்தூர்- 18 மி.மீ.,
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் 35 மிமீ.
திருவாரூர் மாவட்டம் நன்னலம் - 58 மி.மீ.,, பாண்டவையாறு - 50 மி.மீ.,
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் - 31மி.மீ., தழுதாளை - 29மி.மீ.,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் - 71மி.மீ.,, திரமானூர் 67மி.மீ.,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு - 60மி.மீ.,,கலசபாக்கம் - 31 மி.மீ.,
சேலம் மாவட்டம் வீரகனூர் - 30 மி.மீ., ஆத்தூர், ஏற்காட்டில் தலா 20 மி.மீ.,
கோவை மாவட்டம் வால்பாறை - 28 ,பொள்ளாச்சி - 27 மி.மீ.,
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் - 32 மி.மீ.,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு - 50மி.மீ.,, புதுசத்திரம் - 40 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

Popular Posts



No comments:

Post a Comment