வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ‘கடவுள் கூறியதால் உங்கள் வீட்டுக்கு வந்தேன்’ தம்பதியிடம் 35 சவரன் நகை நூதன அபேஸ்: போலி சாமியாருக்கு வலை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 09, 2018

‘கடவுள் கூறியதால் உங்கள் வீட்டுக்கு வந்தேன்’ தம்பதியிடம் 35 சவரன் நகை நூதன அபேஸ்: போலி சாமியாருக்கு வலை



தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் போலி சாமியார் ஒருவர் அவர்கள் வீட்டிற்கு வந்துள்ளார். அவர், உங்கள் வீட்டில் வாஸ்து சரியில்லை. வாஸ்து தோஷத்தை சரி செய்தால் நீங்கள் எடுக்கும் செயல்கள் வெற்றி பெறும்.


 நான் யார் வீட்டுக்கும் செல்வது கிடையாது. உங்கள் வீட்டிற்கு கடவுள் உத்தரவிட்டதால் வந்துள்ளேன் எனக்கூறியுள்ளார். சாமியாரின் பேச்சை முழுவதுமாக நம்பிய கங்காதரும், ராதாவும்  இதற்கு பரிகாரத்தை கூறுங்கள் சுவாமி என்றனர்.  (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!


இதையடுத்து ஒரு பாத்திரத்தில் அரிசியை வைத்து அதற்குள் தங்க நகைகளை வைத்து பூஜை செய்ய வேண்டும் என போலி சாமியார் தெரிவித்தாராம்.
அவர் கூறியபடி ராதா வீட்டில் இருந்த 35 சவரன் மதிப்புள்ள செயின் மற்றும் தங்க நகைகளை அரிசி பாத்திரத்தில் வைத்து போலி சாமியாரிடம் வழங்கியுள்ளார். அதனை மஞ்சள் துணியில் வைத்து கயிறு கட்டி சிறிது நேரம் பூஜை செய்த சாமியார், இதை பூஜை அறையில் வைத்துவிட்டு மாலையில் குளித்துவிட்டு இதை திறந்து அதில் உள்ள அரிசியை சமைத்து சாப்பிட்டால் வீட்டில் உள்ள தோஷங்கள் விலகும் என தெரிவித்தார்.


இதேபோன்று தம்பதியினர் மாலையில் குளித்துவிட்டு பாத்திரத்தைத் திறந்து பார்த்தபோது கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதில் தாங்கள் வைத்த நகைகள் எதுவும் இல்லை. போலி சாமியார் நகை வைத்திருந்த பாத்திரத்தை மறைத்து வைத்துவிட்டு வெறும் அரிசி உள்ள பாத்திரத்தை அவர்களிடம் வழங்கி ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து ஜெகத்யாலா போலீசில் கங்காதர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி சாமியாரை ேதடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment