நடுவானில் வெடித்த ஸ்பேஸ் கிரேப்ட், தப்பித்த வீரர்கள்
ரஷ்யாவை சேர்ந்த ராக்கெட் ஒன்று 2 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு
சுமந்து செல்லும்போது நடுவானில் வெடித்து சிதறி உள்ளது.
நாசா உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக இருந்தாலும்,
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கு இப்போதெல்லாம் சொந்த
ராக்கெட்டை பயன்படுத்துவது கிடையாது. அதற்கு பதிலாக ஸ்பேஸ் எக்ஸ், ப்ளூ
ஆர்ஜின் போன்ற தனியார் நிறுவனங்களை நம்பி இருக்கிறது.
ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான ராஸ்கோமோஸ் (Roscosmos) விண்வெளி
ஆராய்ச்சி நிலையத்தையும் அவ்வப்போது நாசா நம்பி உள்ளது. ஒரு காலத்தில்
நாசாவும், ராஸ்கோமோஸும் பரம எதிரிகள் என்பது வேறு கதை.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
மேலே அனுப்பினார்கள்
இந்த நிலையில் நிக் ஹாக் என்ற அமெரிக்கரையும், அலெக்சி ஒவ்சினின் என்ற
ரஷ்யரையும் சுமந்து கொண்டு, விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி
மையத்தை நோக்கி சென்றது ரஷ்ய ராக்கெட். ரஷ்யாவின் சோயுஸ் ஏஃப்ஜி
ராக்கெட்டின் உதவியுடன் இந்த இருவரும் விண்ணை நோக்கி அனுப்பப்பட்டனர்.
கஜகஸ்தானில் உள்ள சர்வதேச விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இவர்கள்
அனுப்பப்பட்டனர்.
நடுவானில் வெடித்தது
இந்த நிலையில் நேற்று விண்ணில் ஏவப்பட்ட இந்த ராக்கெட் 50 கிலோ மீட்டர்
தூரம் சென்ற சமயத்தில் பாதியில் வெடித்து இருக்கிறது. தொழில்நுட்ப கோளாறு
காரணமாக அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டு இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இதனால் ராக்கெட் வேகமாக பூமியை நோக்கி விழுந்துள்ளது.
கேப்ஸ்யூல் வந்தது
ஆனால் ராக்கெட் வெடித்தவுடன், அதற்குள் இருந்த கேப்ஸ்யூல் வெளியானது. இந்த
கேப்ஸ்யூலில்தான் இரண்டு வீரர்களும் இருந்தனர். இவர்கள் இதற்குள்
பாதுகாப்பாக இருந்தனர். இதையடுத்து கேப்ஸ்யூல் வேகமாக பூமியை நோக்கி
வந்தது. இது அனைத்து விதமான சேதங்களையும் தாங்குமளவிற்கு
வடிவமைக்கப்பட்டுள்ளது.
திறமை
இதையடுத்து பூமிக்கு அருகில் வந்தவுடன் இந்த கேப்ஸ்யூலின் பாராசூட்
திறந்தது. இதனால் இந்த கேப்ஸ்யூலின் வேகம் குறைந்தது. இதனால் அந்த
கேப்ஸ்யூல் பாதுகாப்பாக தரையிறங்கியது. இருவரும் தற்போது மருத்துவ பரிசோதனை
முடிந்து நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது.
என்ன நடக்கிறது
இது ரஷ்யாவிற்கு பேரிடியாக முடிந்து இருக்கிறது. இதனால் விண்வெளிக்கு
மனிதர்களை அனுப்பும் சோயுஸ் ராக்கெட்டுகளை கைவிட ரஷ்யா முடிவெடுத்து
இருப்பதாக தகவல்கள் வருகிறது. இதனால் அமெரிக்கா ரஷ்யா உறவில் இன்னும்
கொஞ்சம் விரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
-
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேல...
-
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள...
-
வேளச்சேரியில் 2 மாதக்குழந்தை காணாமல் போனதாக வந்த புகாரில் பெற்ற தாயே கொன்றது அம்பலமாகியுள்ளது. சென்னை வேளச்சேரி த்ரௌபதி அம்மன்...
-
தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையைச...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படு...
-
மதுராந்தகம் பிரபல பாத்திக்கடையில் இரண்டாவது நாளாக வருமான வரி துறையினர் சோதனை. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் இயங்கி வரும்...
-
குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதியர் சரியான வயதில் முயல வேண்டும்; ஆணும் பெண்ணும் எந்த வயதில் கலவி கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள முயல்வத...
No comments:
Post a Comment