வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: {ப்ளீஸ் இத மட்டும் படிச்சிடாதிங்க } வாழ்க்கையை மாற்ற உதவும் புத்தரின் 25 வாழ்வியல் கருத்துக்கள்! அறியவேண்டிய தகவல்கள்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 15, 2018

{ப்ளீஸ் இத மட்டும் படிச்சிடாதிங்க } வாழ்க்கையை மாற்ற உதவும் புத்தரின் 25 வாழ்வியல் கருத்துக்கள்! அறியவேண்டிய தகவல்கள்!



வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், மனதில் தோன்றும் எண்ணங்கள் எப்படி இருந்தால் வெற்றி பெற முடியும் என இது போன்ற பல விஷயங்களை, பற்பல தத்துவங்களை நம் வரலாறு, புராண இலக்கியங்கள், கதைகள் போன்றவை எடுத்துரைத்து உள்ளன; மேலும் முன் நாட்களில் வாழ்ந்த பல அறிஞர்கள், ஞானிகள், புலவர்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், வெற்றி பெறுவது எப்படி, எண்ணங்களை ஒருமுகப்படுத்துவது எப்படி போன்ற நூறாயிரம் கருத்துக்களை வலியுறுத்தி சென்றிருக்கின்றனர். அவர்களுள் மிக முக்கியமான மனிதர் புத்தர்.

புத்தர் கூறிய கருத்துக்களை கேட்டு, மனம் மாறி பல நற்செயல்களை பல அரசர்கள் புரிந்துள்ளதாக வரலாறு கூறுகிறது; புத்த மார்க்கத்தில் சென்று வெற்றி மற்றும் அமைதியை வாழ்நாளில் எய்தியதாக பல வரலாற்று நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. அத்துணை மகிமை வாய்ந்த கௌதம புத்தர் கூறிய சில வாழ்வியல் தத்துவங்களை நாம் நம்முடைய வாழ்வில் பின்பற்றினால், அது நமக்கு வாழ்வில் வெற்றியடையும் மார்க்கத்தை தெளிவாக காட்டும்; மேலும் அதனால் வாழ்வில் அமைதியும் நிம்மதியும் பெருகி, அனைத்தும் உங்களை வந்து சேரும்.! இப்பதிப்பில் அப்படி புத்தர் அருளிய மிக அருமையான இருபத்து ஐந்து கருத்துக்களை குறித்து படித்தறிவோம்..!
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

1) கோபம் !
 You will not be punished for your anger, you will be punished by your anger 
 உங்கள் வாழ்க்கையில், கோபத்தால் நீங்கள் தண்டிக்கப்பட மாட்டீர்கள், நீங்கள் கொள்ளும் கோபமே உங்களை மறைமுகமாக தண்டிக்கும். ஆகையால், வாழ்வில் கோபம் கொள்ளாமல் கூலாக வாழ முயலுங்கள்!


2) உணருங்கள்! 
 When you realize how perfect everything is you will tilt your head back and laugh at the sky
உங்கள் வாழ்க்கை எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை சரியாக நீங்கள் தீர்மானித்துவிட்டால், அந்த வானத்தையும் நீங்கள் எட்டலாம்; உங்களை யாராலும் தடுக்க முடியாது. ஆகையால், உங்கள் குறிக்கோள் என்ன என்பதை உணருங்கள்!


3) காதல்! 
 You yourself, as much as anybody in the entire universe, deserve your love and affection
உங்களின் மேல் உங்கள் மனதிற்கு இருக்கும் அன்பும் காதலும் புவியின் மாந்தர்கள், மற்ற விஷயங்களின் மீதும் ஏற்பட வேண்டும்; அது நிகழ்ந்தால், இந்த புவியின் அழகை உங்களால் முழுமையாக உணர முடியும்; கடவுள் படிப்பின் அற்புதத்தை அறிய முடியும். எனவே, எல்லோரையும் எல்லாவற்றையும் நேசியுங்கள்.


4) உண்மை 
 Three things cannot be long hidden: The sun, the moon, and the truth 
 நீங்கள் எதை வேண்டுமானாலும் மறைத்துவிட முடியும்; ஆனால், உண்மையை மறைப்பது என்பது முடியாத காரியம். உண்மை என்பது சூரிய சந்திரர்களை போன்றது; அழிவில்லாதது, மறைக்க முடியாதது. வாழ்வில் உண்மையை கடைபிடிக்க முயலுங்கள், உண்மைஆய்க இருக்க முயற்சியுங்கள்!


5) எண்ணங்கள்
 Those who are free of resentful thoughts surely find peace
  உங்கள் எண்ணங்கள் உயர்வாக இருந்தால், நீங்கள் வாழ்வில் உயரத்தை அடைவதோடு, நிம்மதியும் அமைதியும் நிறைந்த வாழ்வு கிடைக்கும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - என்ற கோட்பாட்டை கடைபிடிக்க முயலுங்கள்.


6) மன்னிப்பு
 To understand everything is to forgive everything
 படத்தில் காட்டுவது போல், தமிழில் மன்னிப்பு என்ற வார்த்தையை பிடிக்காது என்று கூறி ஒதுக்கினால், உங்களை சுற்றியுள்ள நபர்கள் உங்களை ஒதுக்க கூடும். எனவே, தவறு செய்ப்பவர்களை மன்னித்து ஏற்று வாழ்ந்து பாருங்கள், உங்கள் வாழ்வில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. 


7) தோல்வி 
 The only real failure in life is not to be true to the best one knows
 வாழ்க்கையில் பந்தயனக்ளில் அலல்து போட்டிகளில் ஏற்படும் தோல்வி நிஜமானதல்ல; உங்களிடம் உண்மையாக அன்பு செலுத்தும் நபர்களிடம் பொய்யாக நடிப்பது தான் உண்மையான தோல்வி. உங்கள் வாழ்வில் உண்மையான தோல்வி ஏற்பட நீங்களே காரணமாகி விடாதீர்கள்.


8) வழி
 You cannot travel the path until you become the path itself 
 மற்றவர்கள் பின்பற்றிய வழியை பின்பற்றி சென்று வெற்றி காண்பது சாதாரணம்; உங்களுக்கென நீங்களே ஒரு தனிப்பாதை அமைத்து, அதை மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு வாழ்ந்து காட்டுவதே அசாதாரணம். சாதாரண விஷயத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம்; ஆனால், அசாதாரண விஷயத்தை உங்களால் மட்டுமே செய்ய முடியும் என்று எண்ணி செயல்படுங்கள்!


9) கற்க கசடற
 However many holy words you read, however many you speak, what good will they do you if you do not act on upon them? 
என்னதான் நல்ல புத்தகங்களை படித்தாலும், நல்லோர் பேச்சை கேட்டாலும், அதன்படி நடவாமல் தான்தோன்றி தனமாக அறத்திற்கு மாறான செயல்களை செய்தால் என்ன படித்து, என்ன லாபம்? ஆகையால், கற்க கசடற நிற்க அதற்கு தக எனும் வாக்கை வாழ்வில் பின்பற்றுங்கள்.

10) செயல்
 A dog is not considered a good dog because he is a good barker. A man is not considered a good man because he is a good talker
ஒரு நாய் நன்றாக குரைத்தால், அது ஒரு நல்ல நாய் என்ற பெயரை பெற்றுவிடலாம்; ஆனால், மனிதன் நல்லவனாக அறியப்பட, அவன் நன்றாக பேசிக்கொண்டிருப்பவனாக அல்ல, நன்கு செயல்படுபவனாக இருத்தல் அவசியம்.


11) மனம்
 The way is not in the sky. The way is in the heart
 வாழ்வில் ஒரு விஷயத்தை முடியும், முடியாது என்று தீர்மானித்து, இலக்கை அடைவது வானில் ஒளிந்திருக்கும் இரகசியம் அல்ல; அது மனதின் ஆழத்தில் தோன்றும் எண்ணம். மனம் நினைத்தால் மண்ணையும் கூட பொன்னாக்கலாம் என்று உணருங்கள்!


12) தனித்தன்மை
 Have compassion for all beings. Rich and poor alike; each has their suffering. Some suffer too much, others too little 
 கால் இல்லாதவன் நடப்பவனை பார்த்து ஏக்கம் கொள்வதும், நடந்து செல்பவன் சைக்கிளில் செல்பவனை பார்த்து ஏங்குவதும், சைக்கிள் காரன் மோட்டார் வண்டி ஊட்டுபவனை பார்த்து பெருமூச்சு விடுவதும், மோட்டார் வண்டிக்காரன் காரில் செல்பவனை பார்த்து ஆசை கொள்வதும் போல இருப்பதை பெரிதாக எண்ணாமல், மற்றோர் உடையதை பெரிதாக எண்ணுவதை இயல்பாக கொண்டுள்ளது மனம். ஆனால், அவரவர் தனக்குரிய ஏக்கங்களையும், சோகத்தையும் சுமந்து தான் மண்ணில் வாழ்கிறார் என்ற உண்மையை மனம் அறிவதில்லை. ஆகையால் வாழ்வின் தத்துவம் அறிந்து செயல்படுங்கள்!


13) 3 விஷயங்கள்
 Teach this triple truth to all: A generous heart, kind speech, and a life of service and compassion are the things which renew humanity
  பெருந்தன்மையான மனம், அன்பான பேச்சு, சேவை செய்யும் குணம் இந்த மூன்று விஷயங்களும் உங்களிடம் இருந்து விட்டால், நீங்கள் வாழ்க்கையில் போற்றத்தக்க மனிதனாக வாழ்வதை யாராலும் மாற்ற இயலாது. 


14) பயம்
 The whole secret of existence is to have no fear. Never fear what will become of you, depend on no one. Only the moment you reject all help are you freed
 வாழ்வில் பயம் எனும் உணர்வே கொள்ளாமல், நாளையை பற்றிய, எதிர்காலம் குறித்த பயங்களை தூக்கி எறிந்துவிட்டு வாழ்க்கையை அதன் போக்கில், அந்தந்த நிமிடங்களில் வாழ்ந்து பாருங்கள், வாழ்வின் அழகான மாற்றத்தை உங்களாலேயே உணர முடியும்.



15) உனக்கு நீயே துணை!
 No one saves us but ourselves. No one can and no one may. We ourselves must walk the path 
வாழ்வில் உன்னைக் காப்பாற்ற எவரும் பிறக்கவில்லை; உன்னை வழிநடத்த யாரும் வரவில்லை. உன்னை நீயே பார்த்துக்கொள்ள வேண்டும்; உனக்கு வேண்டியதை நீயே சிந்தித்து செயலாற்றி அடைய வேண்டும்; உனக்கு நீயே துணை என்று உணர்! உன்னால் எதையும் செய்ய முடியும்.


16) வேலை 
Your work is to discover your work and then with all your heart to give yourself to it 
 வேலை செய்வது அல்லது வேலை என்பது, உன் திறன் என்பதை உன்னால் என்ன செய்ய முடியும் என்பதை மட்டுமே உனக்கு உணர்த்தும்; உண்மையில் உன்னுடைய உள்ளம் தான் நீ யார் என்ற கேள்விக்கான விடையை தரமுடியும்; அதை தவிர்த்து, உன் வேலையால் அறியப்படும் நீ, நீ அல்ல; உன்னுடைய திறமை என்ற வித்தியாசத்தை உணருங்கள்!



17) சார்பு 
 Work out your own salvation. Do not depend on others 
 உன் வேலையை உன் திறமையை காட்டி முடி; மற்றவர்களின் உதவியால் முடித்தல் கேவலம். உன் பணியில் உயர்வை உன்னுடைய திறன் மற்றும் தகுதியால் பெறு; மற்றவர்களை சார்ந்து - காக்கா பிடித்து அல்ல. சார்ந்திருப்பது உன்னுடையய தனித்தன்மையை அழித்துவிடும் என்னும் தகவலை நினைவில் கொண்டு செயல்பாடு நண்பா!

18) எண்ணம்
 What we think, we become 
 உன் மனதில் என்ன நினைக்கிறாயோ, என்ன எண்ணுகிறாயோ அதுவாகவே நீ மாறுகிறாய் என்பது உண்மை - புத்தர் கூறியதை தான் கீதையும் கூறுகிறது. மற்ற அனைத்து காவியங்களும் வேறு வார்த்தைகளால் வலியுறுத்துகின்றன. ஆகையால், வாழ்வில் நீ என்னவாக வேண்டும் என்பதை நீயே முடிவு செய்.


19) கட்டுப்பாடு
 To conquer oneself is a greater task than conquering others 
ஒருவன் தலைவனாக அல்லது காவலனாக யாரை வேண்டுமானாலும் கட்டுப்படுத்தலாம்; ஆனால் தன்னைத் தானே கட்டுப்படுத்தி வாழ்ந்து காட்டி, வாழ்வில் வெற்றி அடைவது தான் உண்மையான வீரம். கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து காட்டினால், கடலையும் கடக்கலாம்.


20) வார்த்தைகள்
 Better than a thousand hollow words, is one word that brings peace 
 அர்த்தமின்றி, பயனில்லாமல் ஆயிரம் வார்த்தைகளை பேசுவதைக் காட்டிலும், அர்த்தமுள்ள மற்றும் மற்றவர்களுக்கு பலனளிக்கும் ஒரு வார்த்தையை பயன்படுத்துவது சிறந்தது. எவ்வளவு பேசுகிறோம் என்பது முக்கியமல்ல; என்ன பேசுகிறோம் என்பது தான் முக்கியம்.



21) அன்பு
 He who loves 50 people has 50 woes. He who loves no one has no woes
 அனைவர்க்கும் அன்பு செய், நீ விழும் நேரங்களில் உனக்கு கரம் கொடுத்து உன்னை கரையேற்ற அவர்கள் துணை நிற்பர்; வாழ்க்கையும் சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும்; அன்பு காட்டுபவர்களால் கஷ்டமும் ஏற்படும்; நன்மையையும் ஏற்படும், எது தான் வாழ்க்கை. யாரையும் நேசிக்கவில்லை எனில் வாழ்விலும் எதுவும் நிகழாது; வாழ்வதே வீண்.


22) ஆரோக்கியம்
 To keep the body in good health is a duty otherwise we shall not be able to keep our mind strong and clear 
 உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் தான், உள்ளமும் எண்ணங்களும் ஆரோக்கியமானதாக வெளிப்பட்டு, வாழ்வில் வெற்றியடைய முடியும்; எனவே, சுவர் இருந்தால் தான் சித்திரம் தீட்ட முடியும் என்ற உண்மையை உணர்ந்து செயல்படுங்கள்.




23) கலைஞன்
 Every human being is the author of his own health or disease 
ஒவ்வொரு மனிதனும் ஒரு கலைஞனே! அவனவன் தன்னுடைய வாழ்வில் நிகழும் நல்லது கெட்டது, நோய்நொடிகள் போன்றவற்றிற்கு தானே காரணமாக வாழ்ந்து மடிகிறான். யாரும் யாரையும் கெடுக்கவோ, தடுக்கவோ முடியாது. தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் கூற்றை தாரக மந்திரமாக கொண்டு செயல்படுங்கள்! வெற்றி உங்களுக்கே!


24) பகிர்தல்
 Thousands of candles can be lit from a single candle, and the life of the candle will not be shortened. Happiness never decreases by being shared 
 ஒரு அகலால் ஆயிரம் விளக்குகளை ஏற்ற முடியும்; அதே போல் உங்கள் வாழ்க்கையை ஆயிரம் நபரின் வாழ்வில் ஒளிதரும் அகல் விளக்காக மாற்றுங்கள்; அவ்வாறு மற்றோர் உயர்விற்கு நீங்கள் காரணமாக இருந்தால், அந்த உணர்விற்கு ஈடு இணை தான் உண்டோ?! வாழ்வில் அறிவையும் பொருளையும் மற்றவருடன் பகிர்ந்து மேம்பட்ட நபராக வாழ்ந்து மற்றவரை மேம்படுத்துங்கள்.



25) எதிர்காலம்
 Do not dwell in the past, do not dream of the future, concentrate the mind on the present moment
கடந்த காலத்தில் எண்ணியதை நினைத்து தொலைந்து போகாமல், எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்ற கனவில் உழலாமல் நிகழ்காலத்தில் கவனம் செலுத்தி, அதில் வாழ முயற்சியுங்கள். இன்று எனும் ஒன்றே நிரந்தரம் - நிச்சயம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்!


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment