ஐசிசி நடத்தும் உலக டி20 கோப்பை தொடருக்கான தகுதி சுற்றுப் போட்டிகள்
நடைபெற்று வருகின்றன.
இதில் ஆசிய நாடுகளுக்கான "பி" பிரிவு போட்டிகளில் சீனா, மியான்மர் ஆகிய
நாடுகள் மிக மிக சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வருவது பெரும் அவல
நகைச்சுவையாக உள்ளது.
அதிலும் சமீபத்தில் நடந்த போட்டியில் இரண்டு அணிகளும் மிக சொற்ப ரன்களில்
வெளியேற, எதிரணிகள் 2 ஓவர்கள் முடிவுக்குள் வெற்றி இலக்கை எட்டியுள்ளன.
மியான்மர் செய்த காமெடி
மியான்மர், மலேசியா இடையே நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய
மியான்மர் அணியில் ஏழு பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் அடிக்காமல் வெளியேறினர்.
மியான்மர் அணி 10.1 ஓவர்களில் 9 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்தது. அப்போது
மழை வந்ததை அடுத்து ஆட்டம் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி மாற்றப்பட்டது
(ஸ்ஸ்ஸ்ப்ப்பா.. முடியல).
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
|
மலேசியா செய்த பயங்கர காமெடி
டக் வொர்த் லீவிஸ் முறைப்படி வெற்றிக்கு 8 ஓவர்களில் 6 ரன்கள் எடுத்தால்
மட்டும் போதும் என்ற நிலையில், மலேசியா அணியின் துவக்க பேட்ஸ்மேன்கள்
இருவரும் ரன் ஏதும் அடிக்காமல் தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறி
அதிர்ச்சி அளித்தனர். எனினும், அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சுஹான்
அழகரத்தினம் மற்றும் முனியாண்டி (அட.. நம்ம மலேசிய தமிழர்கள் தான் போல..)
"நிலைத்து நின்று" மலேசிய அணியின் வெற்றியை 1.4 ஓவர்களில் உறுதி செய்தனர்.
10 பந்துகளில் வெற்றி இலக்கை எட்டிய மலேசியா, மியான்மரை வீழ்த்தியது.
மலேசிய அணியில் எராளமான, மலேசிய தமிழர்கள் மற்றும் இந்தியாவை பூர்விகமாக
கொண்டவர்கள் தான் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.
சீனா - நேபாளம் போட்டி
மற்றொரு போட்டியில் சீனா - நேபாள அணிகள் மோதின. நேபாள அணி ஓரளவு
முதிர்ச்சியான கிரிக்கெட் விளையாடி வருகிறது. சீனாவோ இன்னும் முதல் அடியை
கூட எடுத்து வைக்கவில்லை. அக்டோபர் 10 அன்று நடந்த போட்டியில் முதலில்
பேட்டிங் செய்த சீனா 13 ஓவர்கள் தடுமாறி களத்தில் நின்று 26 ரன்கள் மட்டுமே
எடுத்தது. சீனா அணியின் எட்டு பேட்ஸ்மேன்கள் "0" எடுத்து வெளியேறினர்.
2 ஓவர் கூட தாங்காத சீனா
27 ரன்கள் இலக்கை துரத்திய நேபாளம் 11 பந்துகளில் வெற்றியை எட்டியது.
துவக்க வீரர்களே வெற்றியை பெற்றுக் கொடுத்து விட்டனர். சீனா இரண்டு ஓவர்கள்
வரை கூட கட்டுக்கோப்பாக பந்து வீச முடியாத மோசமான நிலையில் இருந்தது.
எனக்கு ஒரு சந்தேகம்... நிறைய சாதனை பண்ணலாமேன்னு வெஸ்ட் இண்டீஸ் தொடர்
முடிஞ்ச உடனே சீனா, மியான்மர் கூட இந்தியா விளையாடுமோ?
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு திருமணம் செய்ய ...
-
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேல...
-
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள...
-
வேளச்சேரியில் 2 மாதக்குழந்தை காணாமல் போனதாக வந்த புகாரில் பெற்ற தாயே கொன்றது அம்பலமாகியுள்ளது. சென்னை வேளச்சேரி த்ரௌபதி அம்மன்...
-
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் குறைந்த காற்றழ...
-
ஒரு காலத்தில் ... ரொம்ப பின்னாடி போகாதீங்க ஒரு 15 வருஷம் முன்னாடி எல்லாம் வீட்டுல கேபிள் இருக்கானு கேக்கமாட்டாங்க . உங்க ...
-
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நேற்று வெளியாகிய நிலையில், அந்த புகைப்படத்திற்கு ரசிகர...
-
மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படு...
-
குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதியர் சரியான வயதில் முயல வேண்டும்; ஆணும் பெண்ணும் எந்த வயதில் கலவி கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள முயல்வத..
No comments:
Post a Comment