வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 12, 2018

தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை



ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது.


இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சலுகையின் கீழ் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 90 எஸ்.எம்.எஸ். வழங்கப்பட்டுள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
குறிப்பாக புதிய சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகை நாடு முழுக்க அனைத்து வட்டாரங்களில் உள்ள பயனர்களுக்கும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. தற்சமயம் ரூ.399 பிரீபெயிட் சலுதையில் ஏர்டெல் நிறுவனம் தினமும் 1 ஜி.பி. 3ஜி/4ஜி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. புதிய சலுகை போன்று இல்லாமல், ரூ.399 சலுகையின் வேலிடிட்டி ஒவ்வொரு வட்டாரங்களிலும் வேறுபடுகிறது.

சில வட்டாரங்களில் 70 நாட்கள் வேலிடிட்டியும் சில வட்டாரங்களில் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றன. புதிய சலுகை அறிவிக்கப்பட்டு இருப்பதால், பழைய சலுகை தொடர்ந்து வழங்கப்படுமா அல்லது நிறுத்தப்பட்டு விடுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஏர்டெல் அறிவித்து இருக்கும் புதிய சலுகை ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஜியோ அறிவித்து இருக்கும் ரூ.398 சலுகையில் 70 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித தினசரி கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment