வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இன்னும் அவ வயசுக்குகூட வரலம்மா... அதுக்குள்ள! - தேனி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, September 30, 2018

இன்னும் அவ வயசுக்குகூட வரலம்மா... அதுக்குள்ள! - தேனி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்



தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய 11 வயது மகள் ராகவி. கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தன் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகச் சொல்லி, அவர் உடலை வாங்க மாட்டோம் என்று மூன்று நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் ராகவியின் உறவினர்கள். ராகவிக்கு ஆதரவாகப் பலரும் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள். பலரும் தங்களுடைய இரங்கல்களை ராகவியின் குடும்பத்தினரிடம் கூறி வருகிறார்கள். ராகவியின் அம்மாவிடம் பேசினோம். 


 

 ''நாங்க பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவங்கம்மா. நானும் என் வீட்டுக்காரரும் கூலி வேலைக்குப் போய் சம்பாதிக்கிறோம். எங்களுக்கு மூணு பொண்ணுங்க. என் முதல் பொண்ணைக் கட்டிக் கொடுத்துட்டேன். ரெண்டாவது பொண்ணுதான் ராகவி. என் பொண்ணுக்கு 11 வயசாகுதுங்க. இந்தப் புள்ள ஏழாவது படிச்சிட்டு இருந்துச்சு. கடைசி புள்ள 5 வது படிக்குது.


 

 காலையில புள்ளைங்களுக்கு சாப்பாடு கொடுத்து பள்ளிக் கூடத்துக்கு அனுப்பிட்டுதான் நானும் என் வீட்டுக்காரரும் வேலைக்குப் போவோம். இப்போ புள்ளைங்களுக்கு கால்பரீட்சை லீவு விட்டிருக்காங்க. அதனால, புள்ளைங்களை வீட்டுல விட்டுட்டு நானும், என் வீட்டுக்காரரும் வேலைக்குப் போயிட்டோம். அன்னைக்கு காலையில புள்ளைங்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வீட்டுக்குள்ளேயே பார்த்து சூதானமா இருக்கணும் புள்ளைங்களான்னு சொல்லிட்டுத்தான்மா வேலைக்குக் கிளம்புனேன். மத்தியானம் புள்ளைங்களுக்கு சாப்பாடு போட்டுக் கொடுக்க வீட்டுக்கு வந்தேன். புள்ளைங்களுக்கு சோறு போட்டுக் கொடுத்துட்டு கொஞ்சம் துணியை அலசிட்டு இருந்தேன். 




'அம்மா உனக்கு நேரம் ஆயிடுச்சுல... நீ வேலைக்குப் போ... மீதத் துணியை நான் அலசிடுறேன்'ன்னு என் தங்க மக சொன்னாளே..! நானும் சரிம்மான்னு சொல்லிட்டுக் கிளம்புனேனே..! ஐந்தரை மணிக்கு என் கடைசி பொண்ணு... நான் குடியிருக்கிற வீட்டு ஓனர்கூட ஓடியாந்தா. அக்கா செத்துப்போச்சுனு என் கடைசி பொண்ணு கதறி அழுதுச்சு. அதைக் கேட்டதும் என் நெஞ்சே வெடிச்சிருச்சு. இதுவரைக்கும் எங்கள எதிர்த்து எதுவுமே செய்ய மாட்டா. சொன்னதைக் கேட்டுப்பா, கொடுக்கிறத வாங்கிப்பா. என் கையால போட்ட சோறு செமிக்கிறதுக்குள்ள என் புள்ளையே போயிட்டாளே'' என்றவர் சற்று நிதானித்து, ``நாங்க காம்பவுண்டு வீட்டுலதான் குடியிருக்கோம். எங்க ஹவுஸ் ஓனருடைய பையன் எப்போ பார்த்தாலும் எங்க வீட்டுக்கிட்டேயே சுத்திட்டு இருப்பான். 


 

 தண்ணீ அடிச்சிட்டு வந்து எங்க வீட்டுக்குப் பக்கத்துலேயே நின்னுட்டு இருப்பான்மா. அவன் மேலதான் எங்களுக்கு சந்தேகமா இருக்கு. அவன்தான் என் புள்ளையை என்னமோ பண்ணியிருக்கான். இல்லாட்டி என் பொண்ணு தூக்குலாம் மாட்டியிருக்க மாட்டா. இறந்தப்ப அவளோட கால்ல காம்பஸ் வைச்சு குத்தின காயம் இருக்கு, உதடு வீங்கிப்போய் இருந்தது. 


கேட்டா எறும்பு கடிச்சதா சொல்றாங்க... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டைகூட காட்ட மாட்டேங்கிறாங்க. என்னால தாங்க முடியலம்மா. அந்தப் பையனை போலீஸ்காரங்க கைது பண்ணிட்டதா சொல்றாங்க. ஆனா, எங்க கண்ணுல காட்டல. போராட்டம் பண்ற எங்ககிட்ட உடனே பொணத்த வாங்கு, இல்லாட்டி நாங்களே எரிச்சிடுவோம்னு போலீஸ் பயமுறுத்துது. உண்மையில என் பொண்ணு வயசுக்குகூட வரலமா. அவள இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவங்களுக்குக் கண்டிப்பா தண்டனை கிடைக்கும். கிடைக்கும்தானம்மா... மனசாட்சினு ஒண்ணு இருக்குல்ல'' என்று உரக்க அழுகிறார்.


இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஹவுஸ் ஓனர் தரப்பில் விளக்கம் அளிக்க முன்வந்தால், பரீசிலனைக்குப் பிறகு அதையும் பதிவுசெய்ய தயாராக உள்ளோம். உண்மை விரைவில் வெளியே வரவேண்டும்!

No comments:

Post a Comment