வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 10 வயது சிறுமிக்கு ரத்த வியர்வை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, September 30, 2018

10 வயது சிறுமிக்கு ரத்த வியர்வை



கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கூலி தொழிலாளியின் மகளுக்கு வியர்வையாக ரத்தும் வெளியேறுவதால் பெற்றோர்கள் செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கங்கோஜிகொத்தூர் ஊராட்சியில் உள்ள கிராமம் ஜெகநாதபுரம். 


 

 இந்த கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகளான நாகராஜ் & லட்சுமிதேவி தம்பதியினருக்கு அர்ச்சனா(10), தர்ஷணி(8), பல்லவி(5) என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகளான அர்ச்சனா, அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அர்ச்சனாவிற்கு கடந்த ஜூலை மாதம் முதல் திடீரென மூக்கில் இருந்து ஒரே நாளில் அதிக அளவு ரத்தம் வெளியேறியுள்ளது. 

இதற்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிசிச்சை பெற்றார். இதையடுத்து அடுத்தடுத்து சில நாட்களில் உடலில் வியர்வை வெளியேறுவது போல், கண்கள், மூக்கு, காது, கைகள் உள்ளிட்ட உடலில் பல்வேறு இடங்களில் இருந்து ரத்தம் வெளியேறியுள்ளது.
இதையடுத்து அர்ச்சனாவின் பெற்றோர்கள், ஓசூர், ஆந்திரா மாநிலம் குப்பம், கர்நாடகா மாநிலம் பெங்களூர் போன்ற இடங்களில் உள்ள புகழ்பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 


 

 அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரத்தத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து சிறுமி அர்ச்சனாவில் உடலில் இருந்து ரத்தம் வெளியேறுவதை பார்த்த பெற்றோர்கள் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் பிரபாகரிடம், தன் மகளை அழைத்து சென்று, நிலமையை விளக்கி கூறி உதவி செய்யுமாறு மனு அளித்தனர். உடனடியாக சிறுமியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க கலெக்டர் உத்தரவிட்டார். 


 

 இதனையடுத்து அர்ச்சனாவை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பல்வேறு பரிசோதனை செய்து, சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து சிறுமி அர்ச்சனாவின் தந்தை நாகராஜ் கூறுகையில், அர்ச்சனாவிற்கு உடலில் வியர்வை தண்ணீர் வருவது போல் ரத்தம் வருவதை கண்டு, பல தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரம் வரை கடன் வாங்கி செலவு செய்துள்ளேன். அன்றாடம் கூலி வேலை செய்து 3 பெண் குழந்தைகளை வளர்க்க முடியாமல் சிரமம் அடைந்துள்ளேன். தற்போது, அர்ச்சனாவின் மருத்துவ செலவிற்கு போதிய வசதி இல்லை என்பதாலேயே கலெக்டரிடம் அழைத்து வந்தேன் என வேதனையுடன் கூறினார்.


 

 இது குறித்து மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர். அசோக்குமார், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் செல்வி, மது ஆகியோர் கூறுகையில், சிறுமி அர்ச்சனா கடந்த திங்கட் கிழமை முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். 4 முறை உடலில் ரத்தம் வெளியேறியது. பல்வேறு ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்த அறிக்கையில், ரத்தத்தில் எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்துள்ளது. சிறுமிக்கு ஏற்பட்டுள்ள இவ்வகை பாதிப்பு மருத்துவத்துறையில் அரிதாக காணப்படும். த்ரோபாஸ்டினியா எனப்படும் ரத்த ஒழுங்கின்மையின் காரணமாக ஏற்படும் ரத்தப்போக்காக இருக்ககூடும் என்கிற சந்தேகம் உள்ளது. இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள சிறுமியை, சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்கு பரிந்துரை செய்ய உள்ளோம். அங்கு, குருதியியல் வல்லுநர்கள், சிறுமி உடலில் உள்ள ரத்தத்தின் இயற்கை மற்றும் அதன் நோய்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு சிகிச்சை அளிப்பார்கள். சிறுமியின் உடலில் ரத்தம் வெளியேறினாலும், ரத்த அளவு சீராக, நலமுடன் உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.



 

 இது குறித்து மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபாகர் கூறுகையில், சிறுமிக்கு ரத்த தட்டணுக்களில் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இது ஒரு அரிய நோயாகும். உயர்தர சிகிச்சையளிக்க, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு அனுமதி பெற்று, சிறுமிக்கு தேவையான உதவிகளும் அரசு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment